என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குறை தீர்க்கும்"
- தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
- விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிகிழமை ) காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்க லைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
- விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள்கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 1.35 மணி வரை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெ றவுள்ளது.
இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டு றவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
மேற்படி கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சேலம்:
போலீஸ் நிலையங்களில் தீர்வு காணாத புகார் மனுக்க ளின் மீது வாரந்தோறும் புதன்கிழமை அன்று குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது, அப்போது சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி கூட்டத்திற்கு வந்து ஆய்வு செய்தார். குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த மனுதாரர்களின் மனுக்களை வாங்கி விசாரணை மேற்கொண்டார். பின்னர் மனுக்களின் தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி உடனடியாக தீர்வு காண அந்தந்த பகுதி உட்
கோட்ட டி.எஸ்.பி.களுக்கும், இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிட்டார். பினனர் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் சரகத்தில் இதுவரை 18 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அனைத்து பகுதிகளிலும் போலி டாக்டர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. காதல் திருமணத்தால் ஏற்படும் ஆணவக் கொலைகளை தடுக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையினர் சமூக நலத்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏ.டி.எஸ்.பி.க்கள் கென்னடி, செல்ல பாண்டியன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் உடன் இருந்தனர்.
- கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
- 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கொடுமுடி:
கொடுமுடி பேரூராட்சி பகுதியில் க.ஒத்தக்கடையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இதேபோல் கொடுமுடி அருகே கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாம் கொடுமுடி சமூகநல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கிளாம்பாடி பிர்க்காவுக்கு உட்பட்ட ஊஞ்சலூர், வெள்ளோட்டம் பரப்பு, கிளாம் பாடி, பாசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இம்முகாம்களில் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, தெருவிளக்கு போன்ற மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாம்களில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் சக்திவேல், கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுதா, நித்யகல்யாணி, ஊஞ்சலூர் ரமேஷ், பிரபாகர், மருத்துவ துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பவானி வட்டத்திற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், கவுந்தபாடி நில வருவாய் அலுவலகம், குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் என 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிசான்றிதழ், வருமானம், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.
இதில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் 171மனுக்களும், கவுந்தபாடியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 208 மனுக்களும்,குறிச்சியில் மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் 112 மனுக்களும் என மொத்தம் 491மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுக்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சேலம்:
சேலம் தலைமை அஞ்சலக கட்டிடம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக 3-வது தளத்தில் வருகிற 29-ந்தேதி காலை 11 மணியளவில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகார்களை தெரிவிக்கலாம்.
மணி ஆர்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும்.
தபால் மூலம் குறைகளை தெரிவிக்க விரும்புபவர்கள் அஞ்சல் உறையின் மேலே DAK ADALAT CASE என்று எழுதவும்.
மேலும் வருகிற 27-ந்தேதிக்குள் மேற்கண்ட அலுவலகத்தில் கிடைக்குமாறு அந்த தபாலை அனுப்பி வைக்க வேண்டும். இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மேற்கு தபால் கோட்டத்தின் சார்பாக ஓய்வூதியம் பெறுவோர்க்கான குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி மாலை 3 மணிக்கு சூரமங்கலம் தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள சேலம் மேற்கு தபால் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அது சமயம் ஓய்வூதியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் குறைகள் பற்றிய கலந்தாய்வு கோட்ட கண்காணிப்பாளர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சேலம் மேற்கு தபால் கோட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்குமாறு சேலம் மேற்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்